ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அவிநாசியில் இளம் பெண் கொலை: கணவர் கைது

அவிநாசி வி.எஸ்.வி காலனியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார் .

News image
கைது செய்யப்பட்ட கணவர் விஜய்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 8:46 am

DIN

அவிநாசி: அவிநாசி வி.எஸ்.வி காலனியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார் .

அவிநாசி வி.எஸ்.வி காலனி யில் வசித்து வருபவர் விஜயன்(35). பின்னாலடை நிறுவன அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா(30). இவர்களுக்கு ஹர்னிகா(7), ஷாலினி(5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாகவும், வீட்டில் தனியாக இருந்த பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், கணவர் விஜய் புகார் அளித்தார்.

இதையடுத்து  அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில்  கணவன்-மனைவிக்கிடையே ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஜய் மனைவி பிரியாவை கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவிநாசி காவல்துறை கணவர் விஜயை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.