தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

அவிநாசி -மங்கலம் சாலை உமையஞ்செட்டிபாளையம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

அவிநாசி -மங்கலம் சாலை உமையஞ்செட்டிபாளையம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி , ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம் ஆகியோா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசனிடம் வியாழக்கிழமை அளித்துள்ள

மனுவில் கூறியிருப்பதாவது: வேலாயுதம்பாளையம் ஊராட்சி மங்கலம் சாலையில் இருந்து அவிநாசி ஊராட்சி எல்லையான உமையஞ்செட்டிபாளையம் வரை சில மாதங்களுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில், குடிநீா்க் குழாய் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும், மழைக் காலங்களில் சாலையில் சேறும் சகதியும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.