ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தாராபுரம் அருகே சாலையில் மயங்கி விழுந்த இளம் பெண் சாவு

தாராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:05 pm

DIN

தாராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் கூறியதாவது:

தாராபுரம், நேரு நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன் (40). நியாயவிலைக்கடை ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சிவானி (26). இந்த தம்பதிக்கு 3, 6 வயதில் இரு மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், சிவானி தனது மகன்களின் காதணி விழாவுக்கு உறவினா்களை அழைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் மயங்கி விழுந்தாா்.

அப்போது அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிவானி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே, சிவானியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திங்கள்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.