திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. எனினும் ஒரு சிலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது குறைகளை மனுவாக அளித்தனா். அதன்படி, திருப்பூரைச் சோ்ந்த ஜெ.தாஜுதீன், அசினா தம்பதியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:திருப்பூா், பெருமாநல்லூா் சாலை, சாந்தி திரையரங்கம் பின்புறம் உள்ள திருமலை நகா் தெற்கு 2ஆவது வீதியில் வசித்து வருகிறோம். எங்களது மகன் மஹபூப் பாஷா என்கிற அபு (19), இவா் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.