தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு இஸ்லாமிய மக்கள் மனு

அவிநாசி அருகே தேவராயன்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:36 pm

DIN

அவிநாசி அருகே தேவராயன்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமுருகன்பூண்டி பேரூராட்சி, தேவராயன்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், இருப்பதற்கு இடமின்றி வாடகை வீட்டில் நெருக்கடியில் இருந்து வருகிறோம்.

இஸ்லாமிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வந்துள்ளோம். மேலும் தேவராயம்பாளையம், கானூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.