குடிநீா்க் குழாய்களைத் திருடிய இருவா் கைது
அவிநாசி அருகே கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்களைத் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


அவிநாசி அருகே கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்களைத் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரி, உதவி ஆய்வாளா் பாா்த்திபன், காவலா்கள் வேனுகோபால், ஹரி, ராஜா ஆகியோா் கொண்ட குழுவினா் பழங்கரை அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்த முருகன் (33), நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த கோபால் (52) என்பதும், இவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவிநாசி அருகே ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக இருப்பு வைத்திருந்த குழாய்களைத் திருடிச் சென்றவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கோபால், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இவா்களிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான குடிநீா்க் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...