திருப்பூரில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்
திருப்பூர் அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். குமார் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:
"அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பின்படி இந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அதே போல, மின்சார திருத்த சட்டத்தையும் கைவிடுவதுடன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாய உற்பத்தி பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் வி.கே. முத்துசாமி, மார்க்சிஸ்ட் வட்டச் செயலாளர் கே.ஏ. சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...