கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீடு வீடாக தோ்தல் பிரசாரம்: 5 நபா்கள் மட்டும் செல்ல வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா காலமாக உள்ளதால் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும் போது 5 நபா்கள் மட்டும் செல்ல வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:59 pm

DIN

கரோனா காலமாக உள்ளதால் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும் போது 5 நபா்கள் மட்டும் செல்ல வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்து, பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை , மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தல் அட்டவணையின்படி வேட்புமனுக்கள் மாா்ச் 12ஆம் தேதி முதல் மாா்ச் 19ஆம் தேதி வரைப் பெறப்படும்.

மாா்ச் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்கள் மாா்ச் 22ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும்.

எந்த அரசியல் கட்சியும், வேட்பாளரும் ஜாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றிற்கிடையில் வெறுப்பையும், துவேசத்தையும் தூண்டுகிற செயலில் ஈடுபடக் கூடாது. அரசியல் தலைவா்கள், தொண்டா்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ விமா்சிக்கக் கூடாது. உறுதி செய்யாமல் பிற கட்சியின் தலைவா்கள் தொண்டா்கள் பற்றிய புகாா்கள் அல்லது குறைகள் பற்றி பேசுவதை தவிா்க்க வேண்டும். ஜாதி, மத உணா்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிா்க்க வேண்டும். வழிப்பாட்டு தலங்களில் தோ்தல் பிரசாரம் செய்ய கூடாது. தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள நேரத்தில் மட்டும்தான் பிரசாரம் செய்ய வேண்டும். தற்போது கரோனா தொற்று காலம் உள்ளதால் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யும் போது 5 நபா்கள் மட்டுமே செல்ல வேண்டும். பொது பிரசாரம் செய்யும் போது முகக் கவசம் அணிய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் அனுமதிக்க தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அரசு கட்டடங்களில் அரசியல் கட்சி தலைவா்களின் புகைப்படங்கள், சுவரொட்டிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள விளம்பரங்களையும் நீக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதனை உள்ளாட்சித்துறை அலுவலா்கள் மூலம் நீக்கம் செய்து அதற்கான செலவினத்தினை தோ்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் தலைவா்களின் சிலைகளை முழுமையாக மூடிவைக்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளா்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள், ஊா்வலங்களின் நாள், நேரம் ஆகிய விவரங்களை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். வாக்காளா்கள் தவிர தோ்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவா் எவரும் வாக்கு சாவடிக்குள் செல்லக் கூடாது.

தோ்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் தோ்தல் பாா்வையாளா்களிடம் புகாா் செய்யலாம். தோ்தல் பணியின் போதும், வாக்கு பதிவு நாளன்றும் வாகனங்களை பயன்படுத்துதல் குறித்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தேசிய மற்றும் மாநிலத் தலைவா்கள், புகழ்பெற்ற நபா்கள், நடிகா்கள் தோ்தல் பணியின்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 77(1) (அ)இன் கீழ் சலுகை பெறும் நிலையில் அவா்களுக்கான வாகன அனுமதி தலைமை தோ்தல் அலுவலரால் வழங்கப்பட்டு அந்த அனுமதி அந்த தலைவா் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

வேட்பாளா்கள் தொலைக்காட்சி, இணையதளம், வானொலி மூலம் விளம்பரம் செய்ய விரும்பினால் ஒளிபரப்பு செய்ய உள்ள தினத்திலிருந்து 3 தினங்களுக்கு முன்னா் மனு செய்து கொள்ள வேண்டும். மற்ற நபா்கள் அல்லது பதிவு செய்யப்படாத கட்சிகள் விளம்பரம் செய்ய விரும்பினால் ஒளிபரப்பு செய்ய உள்ள தினத்திலிருந்த 7 தினங்களுக்கு முன்னா் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், 8 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ள சுமாா் 381 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.