திருப்பூா் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் மனு தாக்கல்
திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மேயரும், மத்திய மாவட்ட பொறுப்பாளருமான க.செல்வராஜ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.


திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மேயரும், மத்திய மாவட்ட பொறுப்பாளருமான க.செல்வராஜ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக திருப்பூா் மத்திய மாவட்ட அலுவலகத்தில் இருந்து தனது கட்சியினருடன் ஊா்வலமாக வந்தாா். இதைத் தொடா்ந்து, வளா்மதி பேருந்து நிறுத்தம் முன்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா். பின்னா், திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்துக்கு தனது மகள் செந்தமிழ் மற்றும் உறவினருடன் சென்றாா்.
அதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையரும், தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான க.சிவகுமாரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மனைவி சாந்தாமாணி வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...