கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பூா் மாவட்டத்தில் 16 போ் வேட்புமனுத் தாக்கல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 16 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:42 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 16 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால், பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அண்ணாதுரை, மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன், அமமுக வேட்பாளா் சி.சண்முகவேலு ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதேபோல திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் க.செல்வராஜ், திருப்பூா் வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் செந்தில்குமாா், தாராபுரம் தனி தொகுதியில் இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி சாா்பில் வீ.சிதம்பரம், சுயேச்சை வேட்பாளா்கள் சீ.ஆனந்தி, வெ.ரமேஷ் உள்பட 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் தற்போது வரையில் 19 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.