கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாவட்டத்தில் ரூ.18.39 லட்சம் மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 14 நாள்களில் ரூ.18.39 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருள்களை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:43 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 14 நாள்களில் ரூ.18.39 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருள்களை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு முறைகேடுகளைத் தடுக்க திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 பறக்கும் படை குழுக்கள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 16 விடியோ கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி கடந்த மாா்ச் 1 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தாராபுரம் தனி தொகுதிக்கு உள்பட்ட கொளத்துப்பாளையத்தில் 1,950 எவா்சில்வா் தட்டுகள், 1,700 சேலைகள், 4,500 வேஷ்டிகள் என மொத்தம் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட படியூரில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கம்பளிகள், திருப்பூா் வடக்குத் தொகுதியில் ரூ. 2,740 மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள 3 சிலைகள், உடுமலையில் ரூ.1 லட்சத்து 5,700 மதிப்புள்ள 151 பரிசு பைகள் என மொத்தம் ரூ.10 லட்சத்து 66 ஆயிரத்து 440 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக 7 பேரிடமிருந்து ரூ. 7.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 14 நாள்களில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.18.39 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.