தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பாஜக வேட்பாளர் எல்.முருகன்
தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.


தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். தாராபுரம் சார் ஆட்சியரிடம் கடந்த வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் தாராபுரம் வீரராகவப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு அலங்கியத்தில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இதில், பிரசார வாகனம் செல்ல முடியாத ஊருக்குள் பாஜக தொண்டருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து, திருமலைபாளையம், பஞ்சபட்டி, ஏடிகாலனி, ரெட்டிபாளையம், வேலூர், சின்னப்புத்தூர், காளிபாளையம், கோவிந்தாபுரம், பாப்பனூத்து, சின்னக்காம்பாளையம் பிரிவு, ஆசீர்புரம் உள்ளிட்ட 48 கிராமங்களில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டார். அப்போது கோவிந்தாபுரம் பகுதியில் சிறுவனுடன் முருகன் செல்பி எடுத்துக் கொண்டார்.

காங்கிரஸ் நிர்வாகி பாஜகவில் இணைந்தார்: இதனிடையே, கோவிந்தாபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முருகன் காங்கிரஸ் வட்டார துணை தலைவர் மணி என்கிற சீனிவாசன் இல்லத்துக்கு சென்றார். அப்போது முருகன் முன்னிலையில் சீனிவாசன் பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் எம்.பி.கார்வேந்தன், திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பொன்.ருத்ரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...