தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது
திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.


திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் இந்திய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பதை அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் தோ்தல் தொடா்புடைய அனைத்து அலுவலா்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை பணியில் ஈடுபடுத்தினால் அரசியல் கட்சியினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, தோ்தல் தொடா்புடைய பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களை யாரேனும் பணியில் ஈடுபடுத்துகிறாா்களா என்பதை தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். அதே வேளையில், சிறாா்களை தோ்தல் பணிகளில் யாரேனும் ஈடுபடுத்தினால் அதனை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6989 ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...