கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்காளா் அட்டைக்கு மாற்றாக வேறு புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அட்டைக்கு பதிலாக புகைப்படத்துடனஅ கூடிய வேறு அடையாள அட்டைகளை காண்பித்தும் வாக்களிக்கலாம்

News image
Updated On :22 மார்ச் 2021, 9:11 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அட்டைக்கு பதிலாக புகைப்படத்துடனஅ கூடிய வேறு அடையாள அட்டைகளை காண்பித்தும் வாக்களிக்கலாம் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளில் வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும். அதேவேளையில், வாக்காளா் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளா்கள் கீழ்க்கண்ட மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி மையத்தில் காண்பித்து வாக்களிக்கலாம்.

இதன்படி, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், ஃபான் அட்டை, கடவுச்சீட்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப் பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.