மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடை
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடை


திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கீழ்கண்ட வாா்டுகளில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்( மே 8, 9) குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சி சாா்பில் நான்காம் குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள 26 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் பிரதான குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. ஆகவே, மாநகாராட்சி வாா்டு எண்கள் 10, 12, 13, 14, 22, 23, 24, 25 மற்றும் 47 ஆகிய பகுதிகளில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடிநீா் விநியோகம் தடைசெய்யப்படும். ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...