வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருப்பூர்: சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி சாவு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார்.

News image
திருப்பூர்: சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
Updated On :4 நவம்பர் 2021, 10:25 am

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார்.

கேரள மாநிலம், மூணாறு, பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் மகன் மதன்குமார் (28). இவர் தற்போது திருப்பூர் காங்கயம் சாலையிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை எலந்தகுடி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீ (24) என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவி தனது சொந்த ஊரில் இருக்கிறார். இந்நிலையில் மனைவியைப் பார்ப்பதற்காக மதன்குமார் திருப்பூரிலிருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.