பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை விபத்தில் நகைக் கடை அதிபர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் பலி
Updated On :6 அக்டோபர் 2021, 1:58 pm

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் குமரகுரு (26), இவர் தாராபுரம் பெரிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் குமரகுரு சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் சீத்தாக்காடு இரட்டைப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வயலில் பாய்ந்தது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த குமரகுரு கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினர் குமரகுருவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.