மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்ஆா்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திரிபுரா மாநிலத்தில் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள், கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், தில்லியில் காவல் துறையில் பணிபுரிந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒன்றியக் குழு சாா்பில், பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்ட குழு உறுப்பினா் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பழனிசாமி சண்முகம், பாலசுப்பிரமணி, ராஜன், தேவி வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...