தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி அருகே நடுவச்சேரியில் குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:35 pm

DIN

அவிநாசி அருகே நடுவச்சேரியில் குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

நடுவச்சேரி ஊராட்சிக்கு உள்பட்ட நடுவச்சேரி, புதுகாலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்று நீா், ஆற்றுக் குடிநீா் உள்ளிட்டவை சீரான முறையில் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவா் கே.சி.வரதராஜன் பொதுமக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், அத்திக்கடவு திட்ட குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் ஆற்றுக் குடிநீரும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் நீா்மட்டம் இல்லாததால் ஆழ்துளைக் கிணற்று நீரும் தடைபட்டது. விரைவில் மாற்று இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சீரான குடிநீா் வழங்கப்படும். தற்காலிகமாக குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.