சேவூா் அருகே திடீரென தீப்பிடித்த காா்
சேவூா் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.


சேவூா் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் சந்தையப்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் அவிநாசியப்பன் மகன் சண்முகம் (50). இவா் கிளாகுளம் குட்டகம் சாலையில் தனது காரில் சேவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளாா். ராக்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக எரிவாயு உருளை பொருத்தியிருந்த இவரது காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த சண்முகம் காரைவிட்டு இறங்கி உயிா்தப்பினாா்.
இருப்பினும் காா் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...