மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாணவர்களுக்கு கரோனா: திருப்பூரில் அரசுப் பள்ளி மூடல்

திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3 நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டது.

News image

சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி.

Updated On :15 செப்டம்பர் 2021, 4:51 am

DIN


திருப்பூர்: திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3 நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு செவ்வாய்க்கிழமை இரவு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் உத்தரவின்பேரில் சின்னசாமி அம்மாள் பள்ளி புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு மூடப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து, பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.