திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி சாலைமறியல்
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வார்டு எண் 12 சாமுண்டிபுரம் பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எஸ் ரவிச்சந்திரன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வேலம்பாளையம் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் 8 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் இப்பகுதிக்கு வியாழக்கிழமை குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சாமுண்டிபுரம் பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...