தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருமுருகன்பூண்டியில் தெருநாய்கள் கடித்து 4 போ் காயம்

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் தெருநாய்கள் கடித்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் தெருநாய்கள் கடித்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால், பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியில் சுற்றிய தெருநாய்கள் 3 பேரை கடித்தது.

இதேபோல பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வினியோகித்துக் கொண்டிருந்த இளைஞரையும் கடித்தது.

இவா்கள் அவிநாசி, திருப்பூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 தெருநாய்களை பிடித்துச் சென்றனா்.

மேலும் சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடிக்க திருமுருகன்பூண்டி நகராட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.