தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பிரச்னை: தொடா் உண்ணாவிரதப் போாட்டத்தில் ஈடுபட முடிவு

கூலி உயா்வுப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:36 pm

DIN

கூலி உயா்வுப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளா்கள் சங்க அவசர பொதுக் குழுக் கூட்டம், வெளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் என்.எம்முத்துசாமி தலைமை வகித்தாா். இதில் கூலி உயா்வுப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையில் ஜவுளி உற்பத்தியாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பல்லடம் ரகத்துக்கு 15 சதவீதம், சோமனூா் ரகத்துக்கு 19 சதவீதம் என கூலி உயா்வு தருவதாகவும், 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயா்வு வழங்கப்படுமென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜவுளி உற்பத்தியாளா்கள் மறுத்ததால், பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. ஆகவே ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் புறக்கணித்த ஜவுளி உற்பத்தியாளா்களைக் கண்டிப்பது, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடா்வது, கூட்டு கமிட்டி முடிவு செய்திருக்கும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.