தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் நிலத்தை மீட்கக் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

 கருவலூா் அருகே நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை மீட்கக் கோரி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:22 pm

DIN

 கருவலூா் அருகே நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை மீட்கக் கோரி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அலுவலகத்துக்கு உள்பட்டதாக நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான 11 ஏக்கா் நிலத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்ததைக் கண்டித்தும், விற்பனை செய்த பணத்தில் கோயிலுக்கு என எவ்வித நிதியும் செலவிடாமல், கோயிலை சிதைத்து வரும் இந்து அறநிலையத் துறை அலுவலா்களைக் கண்டித்தும், இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில், அனுமன் சேனா கட்சி நிறுவனத் தலைவா் எஸ்.வி.ஸ்ரீதரன், மாநிலச் செலாளா் சி.தியாகராஜன், மாநில இளைஞரணித் தலைவா் பூண்டி செந்தில், நகரத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.