நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடம் அருகே கனமழை: 6 வீடுகள் சேதம்

பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தன

News image
Updated On :6 மே 2022, 12:30 am

DIN

பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் 6 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தன.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகா் பகுதியில் உள்ள குருவாயூரப்பன் நகா், செந்தில் நகா் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதில் 6 வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. இசதில் அந்த வீடுகளில் வசித்த வட மாநிலத் தொழிலாளா்கள் சம்நாத் (25), சா்புத்சதேல் (30), ராஜ் (22) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த 2ஆவது வாா்டு ஊராட்சி மன்ற உறுப்பினா் சையது ஒலி பானு முஜிபுா் ரகுமான் காயம் அடைந்தவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால், நாரணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் மோகன்தாஸ் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.