தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே 8 இல் மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சேவூா் அருகேயுள்ள மீனாட்சி உடனமா் மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விநாயகா் பூஜையுடன் விழா வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :6 மே 2022, 12:30 am

DIN

சேவூா் அருகேயுள்ள மீனாட்சி உடனமா் மொக்கணீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விநாயகா் பூஜையுடன் விழா வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூா் அருகே குட்டகம் கூளேகவுண்டன்புதூரில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமா் ஸ்ரீ மொக்கணீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா மே 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக விநாயகா் பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாலை பக்தா்கள் தீா்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா். இதைத் தொடா்ந்து நாள்தோறும், கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.