தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.9 லட்சம் லஞ்சம்:வணிக வரித் துறை அதிகாரி, பெண் எழுத்தா் கைது

திருப்பூரில் ரிக் நிறுவன உரிமையாளருக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரித் துறை உதவி ஆணையா், பெண் எழுத்தா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 8:57 pm

DIN

திருப்பூரில் ரிக் நிறுவன உரிமையாளருக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரித் துறை உதவி ஆணையா், பெண் எழுத்தா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் குணசேகரன் (47). இவரும் இவரது மனைவியும், திருப்பூரில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரிக் நிறுவனம் நடத்தி வருகின்றனா். இவா்கள் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பொருள்களை கேரளத்துக்கு அனுப்பி வந்துள்ளனா்.

அதற்காக வணிக வரித் துறையில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை கடந்த 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை செலுத்தவில்லை. இதையடுத்து, திருப்பூா் குமரன் சாலையில் உள்ள வணிக வரித் துறை 2ஆம் மண்டல அலுவலகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வரி நிலுவையான ரூ.6.78 லட்சத்தை செலுத்தி தடையின்மைச் சான்று பெற வணிக வரித் துறை உதவி ஆணையா் ஜெயகணேசன், எழுத்தா் டி.எம்.டி.ரத்னா ஆகியோரை அணுகியுள்ளாா். இதில் தடையின்மைச் சான்று அளிக்க உதவி ஆணையா் ஜெயகணேசன் ரூ.7 லட்சமும், எழுத்தா் ரத்னா ரூ.2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளனா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் குணசேகரன் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயகணேசன், ரத்னா ஆகியோரிடம் குணசேகரன் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஜெயகணேசன், ரத்னா ஆகியோரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.