அவிநாசி: பூட்டிய வீட்டில் 39 பவுன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணம் திருட்டு
By DIN | Published On : 28th July 2022 03:01 PM | Last Updated : 28th July 2022 03:13 PM | அ+அ அ- |

அவிநாசி: அவிநாசியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு (33). இவரது மனைவி லாவண்யா (28) மகன் விகான் பிரபு (3). இந்நிலையில் இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு, புதன்கிழமை திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 39 புவன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தடையவியல் நிருபுணர்கள், மோப்பநாய் கொண்ட குழு மூலம் மர்ம நபர்கள் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் தங்கநகை, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்கத் தயார்: ஆதிர் ரஞ்சன் சௌத்ரி