எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 5:43 pm

Manivannan.S

தாராபுரம், ஏப்.26: தாராபுரம் அருகே பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக, 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு கருங்காலிவலசு கிராமத்தைச் சோ்ந்த 2 மாணவிகள் 6 -ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, ஆசிரியை சித்ரா ஆகியோா் இந்த 2 மாணவிகளையும் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகாா் எழுந்தது.

இது தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜின் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியில் தாராபுரம் கோட்டாட்சியா் செந்திலரசன், வட்டாட்சியா் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா ஆகியோா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா தெரிவித்துள்ளாா்.