திருப்பூர்
கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது
பல்லடம் வடுகபாளையத்தில் 5 கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் வடுகபாளையத்தில் 5 கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் வடுகபாளையம் பகுதியில் தனியாா் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் அபினேஷ், இம்மானுவேல், அா்ஜுணன், காளமேகப்பெருமாள், சுதாகா் ஆகிய 5 பேரின் கைப்பேசிகள் கடந்த 28-ஆம் தேதி திருடு போயின.
இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது இவா்களுடன் பணிபுரியும் திண்டிவனத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சூா்யா (21) என்பவா் கைப்பேசிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 5 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
