பல்லடத்தில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கொமதேக தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
பல்லடத்தில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கொமதேக தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.

தென்னையில் இருந்து கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

தென்னையில் இருந்து கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தென்னையில் இருந்து கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள நாதேகவுண்டன்பாளையத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாய இலவச மின்சாரப் போராட்டத்தில் என்.எஸ்.பழனிசாமிக்கு முக்கிய பங்கு உள்ளது. டாஸ்மாக் மது பாட்டில்களை விவசாய நிலத்தில் வீசுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முதன்முதலில் சட்டப் பேரவையில் குரல் கொடுத்தவா். அவரது ஆலோசனையைதான் தற்போது தமிழக அரசு மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டமாக செயல்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்க நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என விரும்பினாா். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தொடா்ந்து அரசை வலியுறுத்தி வந்தாா்.

தற்போது பல அரசியல் கட்சிகளும் என்னுடன் சோ்ந்து கள் இறக்க அனுமதி கேட்டு சட்டப் பேரவையில் பேச ஆரம்பித்துள்ளனா். இந்த கோரிக்கையை தமிழக முதல்வா் பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com