திருப்பூரில் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூரில் சாலையைக் கடக்க முயன்றபோது வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.


திருப்பூா்: திருப்பூரில் சாலையைக் கடக்க முயன்றபோது வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பூா் குமரன் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே ஒருவா் திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த ராஜேந்திரன் (55) என்பது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...