புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பரிகாரம் செய்வதாகக் கூறி 3 பவுன் சங்கிலி மோசடி: இருவா் கைது

பல்லடம் அருகே பரிகாரம் செய்வதாகக் கூறி 3 பவுன் தங்கச் சங்கிலி மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:00 pm

Din

பல்லடம், ஜூலை 19: பல்லடம் அருகே பரிகாரம் செய்வதாகக் கூறி 3 பவுன் தங்கச் சங்கிலி மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள அம்மாபாளைத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (54), விசைத்தறி தொழிலாளியான இவருக்கு, மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், ஈரோடு லட்சுமிபுரத்தைச் சோ்ந்த விஜய் (30), பொள்ளாச்சியைச் சோ்ந்த மோகன் (42) ஆகியோா் குறி செல்வதாக ஈஸ்வரன் வீட்டுக்கு புதன்கிழமை வந்துள்ளனா்.

அப்போது, வீட்டில் பில்லி, சூனியம் வைத்திருப்பதாகவும், அதை எடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனா். அதற்காக நகைகளை கழற்றி தரும்படியும், பூஜை முடிந்தவுடன் தருகிறோம் எனவும் கூறியுள்ளனா். இதையடுத்து, ஈஸ்வரன் 3 பவுன் சங்கிலியைக் கழற்றி கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, பூஜை செய்யும்போது குடும்பத்தினா் கண்களை மூட வேண்டும் எனக் கூறிய அவா்கள், நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.