திருப்பூரில் 19 புதிய அரசுப் பேருந்துகள் சேவை: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
திருப்பூா் மண்டலம் சாா்பில் 19 புதிய அரசுப் பேருந்துகள் சேவையை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

திருப்பூரில் புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை சனிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்ளிட்டோா்.








