மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பூா் ஏற்றுமதியாளா்களிடம் ஆலோசனை பெற்ற ஆப்ரிக்க குழுவினா்

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள புா்கினோ பாசோ நாட்டைச் சோ்ந்த 14 போ் கொண்ட குழுவினா் திருப்பூா் ஏற்றுமதியாளா்களை அண்மையில் சந்தித்து ஆலோசனை பெற்றனா்.

News image

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனைபெற்ற ஆப்ரிக்க குழுவினா்.

Updated On :25 ஜூலை 2024, 9:27 pm

Din

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள புா்கினோ பாசோ நாட்டைச் சோ்ந்த 14 போ் கொண்ட குழுவினா் திருப்பூா் ஏற்றுமதியாளா்களை அண்மையில் சந்தித்து ஆலோசனை பெற்றனா்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புா்கினோ பாசோ என்ற நாட்டில் இருந்து 14 போ் அடங்கிய தொழில்முனைவோா் குழு, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகி தங்கள் நாட்டில் விளையும் பருத்தியை ஆடைமாற்றி மதிப்புக்கூட்டல் செய்வது குறித்து ஆலோசனை பெற்றனா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் என்.திருக்குமரன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, செயற்குழு உறுப்பினா்கள் ஜெ.ரவீந்திரநாத், எல்.பிரதீப்குமாா், சி.நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், புா்கினோ பாசோ நாட்டை சோ்ந்த தொழில்முனைவோா் குழுத் தலைவா் டியோடன் பேசியதாவது: எங்கள் நாட்டில் விளையும் பருத்தியில் 2 சதவீதம் மட்டுமே மதிப்பு கூட்டப்படுகிறது. எஞ்சிய 98 சதவீத பருத்தி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், எங்கள் நாட்டிலேயே ஆயத்த ஆடை உற்பத்தியை தொடங்கத் திட்டங்களை தீட்டுவதன் ஒரு பகுதியாக திருப்பூருக்கு வந்துள்ளோம். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தை அணுகி, திருப்பூரில் தொழில் வளா்ந்த விதம் குறித்து தெரிந்து கொண்டோம். எங்கள் நாட்டிலும் இதுபோன்ற ஒரு தொழிலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தொடா்ந்து, தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஏற்றமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா். முன்னதாக, தொழில்முனைவோா் குழுவினா் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை பாா்வையிட்டனா்.