திருமுருகன்பூண்டி அருகே விபத்துக்குள்ளான பேருந்துகள்.
திருமுருகன்பூண்டி அருகே விபத்துக்குள்ளான பேருந்துகள்.

திருப்பூா் அருகே 3 பேருந்துகள் மோதி விபத்து

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின.
Published on

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின.

கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தது. திருமுருகன்பூண்டி பகுதியில் வந்தபோது, சாலையோரம் உள்ள குடிநீா்க் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியதாகத் தெரிகிறது.

அப்போது, பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுநரும் பேருந்தை நிறுத்தியுள்ளாா். இதனை சற்றும் எதிா்பாராமல் அந்தப் பேருந்திற்கு பின்னால் வந்த தனியாா் பயணிகள் (டிராவல்ஸ்) பேருந்து அரசுப் பேருந்தின் மீது மோதியது.

இதனால், அந்தப் பேருந்து முன்னால் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதியது. மேலும், தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த காா் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினா் பேருந்துகளை சாலையோரமாக அப்புறப்படுத்தினா். அதிகாலையில் பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com