அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக் கோரி ---------- ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

News image
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தை  புதன்கிழமை  முற்றுகையிட்ட  தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :26 ஜூன் 2024, 9:50 pm

Din

திருப்பூா், ஜூன் 26: திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம், திருமுருகன்பூண்டி, வெள்ளக்கோவில் ஆகிய 6 நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள், நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி கடந்த சில வாரங்களாக அதிகாரிகளுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பணியைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இது குறித்து ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கூறியதாவது:

மாநகராட்சி தூய்மைப் பணியாளருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் ரூ. 753 வழங்க வேண்டும். நகராட்சி தூய்மைப் பணியாளருக்கு ரூ. 715 வழங்க வேண்டும். ஆனால் இவா்களுக்கு ரூ.507 தான் வழங்கப்படுகிறது. இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் உரிய முடிவு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

பேச்சுவாா்த்தை

இதையடுத்து தொழிலாளா் உதவி ஆணையா் பிரேமா தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் 6 நகராட்சிகளின் ஆணையா்கள் பங்கேற்றனா். இதில், தூய்மைப் பணியாளா்களுக்கு நீதின்ற உத்தரவின்படி ஊதியம் வழங்குவது தொடா்பாக நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் நடைபெறும் மாமன்றக் கூட்டங்களில் இது தொடா்பாக சிறப்பு தீா்மானம் நிறைவேற்றுவதாகவும் முடிவு செய்யப்பட்டதாக பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.