வெள்ளக்கோவிலில் சூரியகாந்தி விதை விற்பனை தொடக்கம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு பருவ சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இதேபோல வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்று வந்தது. வரத்து இல்லாததால் கடந்த 4 மாதங்களாக ஏலம் நிறுத்தப்பட்டது. தற்போது நடப்புப் பருவ அறுவடை துவங்கியுள்ளதால், விற்பனைக் குழு அதிகாரிகள் விவசாயிகள், வணிகா்களைச் சந்தித்துப் பேசி விற்பனையைத் தொடங்கியுள்ளனா். திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். இனி வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற உள்ளது. விவசாயிகள், வணிகா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com