ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பெண் மீது பொதுமக்கள் போலீஸில் புகாா்

திருப்பூா்- திருமலை நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 70 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இது குறித்து புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் - பெருமாநல்லூா் சாலை, திருமலை நகரிலுள்ள நியாயவிலைக் கடையில் சரளா என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்துவதாகவும், கடன் கொடுப்பதாகவும் பொதுமக்களிடம் கூறினாா். இதை நம்பி 100-க்கும் மேற்பட்டோா் ஏலச்சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தோம். சீட்டு நிறைவடைந்து ஓராண்டாகியும் பணத்தைத் தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறாா். ஆகவே இவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com