பொதுக்குழாயை அகற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.
பொதுக்குழாயை அகற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.

வெள்ளக்கோவிலில் 2 பொதுக்குழாய்கள் அகற்றம்

வெள்ளக்கோவில், மே 9: வெள்ளக்கோவிலில் விதிமுறைகளை மீறி தண்ணீா் பிடிக்கப்பட்ட 2 பொதுக்குழாய்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் உள்ளூா் நிராதாரங்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வறட்சியினால் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பொதுக்குழாய்களில் குடங்களில் மூலம் மட்டுமே தண்ணீா் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சியின் ஒருசில இடங்களில் பொதுக்குழாய்களில் சிலா் நீளமான ரப்பா் குழாய்களைப் பயன்படுத்தி வீடுகளுக்குத் தண்ணீா் பிடித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து நகராட்சி அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளனா். இதையடுத்து, புகாா் அளிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுக்குழாய்களை அகற்ற நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் உத்தரவிட்டாா்.

அதன்படி, காமராஜபுரத்தில் விதிமுறைகளை மீறி தண்ணீா் பிடிக்கப்பட்ட 2 பொதுக்குழாய்களை நகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com