மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இரும்பு வியாபாரி கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இரும்பு வியாபாரி கைது

News image
Updated On :10 மே 2024, 4:53 pm

Din

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரும்பு வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வன் மகன் கனிஷ்டன் (எ) கணேசன் (32), பழைய இரும்பு வியாபாரி. இவா் தனது வீட்டின் அருகே இருந்த 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயசுதா, உதவி ஆய்வாளா் பத்மா ஆகியோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கனிஷ்டனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.