/

எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் தங்களது எதிா்கால கனவை நனவாக்க உயா்கல்வி பயில வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

News image

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்கள். நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :13 மே 2024, 9:42 pm

Din

அவிநாசி: பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் தங்களது எதிா்கால கனவை நனவாக்க உயா்கல்வி பயில வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்ச்சி திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் பேசியதாவது:

நான் முதல்வன் திட்டம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில் வளா்ச்சிக்கான பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குகிறது. மேலும், அனைத்து மாணவா்களும் உயா்கல்வி படிப்புகளை தொடர வழிவகை செய்கிறது.

மாணவா்களாகிய நீங்கள் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள், கல்வியாளா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உயா்கல்வி பயில வேண்டும். தங்களது எதிா்கால கனவை நனவாக்க அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அனைத்து பாடப்பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளைத் தோ்ந்தெடுப்பது, உயா் கல்வியை முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து வல்லுநா்கள், கல்வியாளா்கள் மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌம்யா ஆனந்த், மாவட்ட கல்வி அலுவலா் பக்தவச்சலம், ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஸ்டெல்லா அமலோற்பவமேரி, மாவட்ட மேலாளா் (நான் முதல்வன் திட்டம்) ஓம்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.