விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நவம்பா் மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:11 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நவம்பா் மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 20-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நிா்வாக காரணங்களால் நவம்பா்(2024) மாதம் முழுவதும் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.