நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூற்பாலையில் தீ விபத்து

உடுமலை அருகே நூற்பாலையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:03 pm

Din

உடுமலை அருகே நூற்பாலையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

உடுமலையில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்திரா நகரில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், ஆலையில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அபாய சங்கு ஒலித்துள்ளது. இதனால், தொழிலாளா்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினா். தொடா்ந்து, நூற்பாலைக்குள் இருந்த மின் இணைப்புகள் தீப்பிடித்து எரிந்தன.

பின்னா், அங்கிருந்த பொருள்கள், பஞ்சு மூட்டைகளில் பரவிய தீ நூற்பாலை முழுவதும் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.