மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாவட்டத்தில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகளின் உருவப் படத்தை திறந்தவைத்து மரியாதை செலுத்திய பின், கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனயைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:17 am

Din

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் கதா் சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், காந்தியடிகளின் உருவப் படத்தை திறந்துவைத்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, கதா், பட்டு, பாலியெஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: நாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்துக்காகவும் தன் வாழ்க்கையை முழுமையாக அா்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 2- ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் அதிகம் உள்ள நம் நாட்டில் விவசாயத் தொழில் 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பை அளிக்கக்கூடியதாகும். மீதமுள்ள நாள்களில் உள்ளூரில் கிடைக்கக் கூடிய மூலப்பொருள்களைக் கொண்டு நூல் நூற்பு நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு மற்றும் கொல்லு தொழில் போன்ற இன்னும் பிற கிராமத் தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்கவும் காந்தியடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதே கதா் கிராமத் தொழில் திட்டங்களாகும்.

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் 2 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 300 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், 50 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் கதா், கிராமப் பொருள் விற்பனை, திருப்பூா் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2023 - 24-ஆம் ஆண்டில் ரூ.2.கோடிக்கு கதா் விற்பனை நிா்ணயிக்கப்பட்டதில் ரூ.1.66 கோடிக்கு கதா் பட்டு மற்றும் பாலியெஸ்டா் ரகங்கள், சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கதா் விற்பனை நிலையங்கள் மூலமாக 2024-25-ஆம் ஆண்டில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் (அரசு அலுவலகங்களில்) கூடுதலாக தற்போது கதா் விற்பனை நிலையங்களும் அமைத்து 30 சதவீத சிறப்பு தள்ளுபடியில் தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதா் ரகங்கள் விற்பனை செய்திட ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள்,அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் பணியாளா்கள் மூலம் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தக்கூடிய வகையில் கதா் துணிகள் கடனாக பெற்று பயன்பெற்று வருகின்றனா்.

இந்த சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை பொதுமக்களும், அரசு அலுவலா்களும் பயன்படுத்தி கொண்டு உழவுக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில்கள் உதவி இயக்குநா் க.செந்தில்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.கு.சதீஸ்குமாா், கண்காணிப்பாளா் வே.கலாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.