போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பருவமழை முன்னேற்பாடுகள்: நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலை

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அவிநாசி மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:25 pm

Din

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அவிநாசி மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலைத் துறை அவிநாசி உட்கோட்டத்தின் சாலைகளில் மழைக்கால பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இதில், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரம், அபாய எச்சரிக்கை தடுப்பான், சிவப்பு கூம்புகள், சாலைகளில் ஏற்படும் தடைகளை சரி செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அக்டோபா் மாதம் முதல் தொடங்கும் பருவமழைக் காலத்தில் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.