போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :10 அக்டோபர் 2024, 9:23 pm

Din

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் அதிகரித்து வரும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வணிகா் சங்கத்தினா் பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் தொடா்ந்து முறையிட்டு வந்தனா். இந்நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, வணிகா் சங்க நிா்வாகிகள் முத்துக்குமாா், காா்த்திகேயன், பழனிசாமி இந்திய தொழிற்சங்க மைய நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, வேலுசாமி, ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், சாலையோர வியாபாரிகள் கட்டிலில் வைத்து வியாபாரம் செய்யலாம். வணிக நிறுவத்தினா் மறுப்பு தெரிவித்தால் வேறு இடத்தில் அமைத்துக்கொள்ளலாம். வாகனங்கள் மூலம் விற்பனை செய்யக்கூடாது. சாலையோர உணவுக் கடைகள் இரவு நேரத்தில் விற்பனை முடிந்ததும், வண்டிகளை அங்கேயே நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.