இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.


திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஸ்ரீசுரபி காா்டனை சோ்ந்தவா் வினோத் குமாா் (42). பேன்சி கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி புஷ்பா (38).
இவா்களுக்கு 16 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனா்.
இந்நிலையில் வினோத்குமாா், புஷ்பா ஆகிய இருவரும் மங்கலத்தில் உள்ள கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றனா். வஞ்சிபாளையம் மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி, வினோத்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், புஷ்பா சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோத்குமாரை அப்பகுதியினா் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வினோத்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து தகவலறிந்த திருமுருகன் பூண்டி போலீஸாா் சம்பவ இடத்தக்குச் சென்று புஷ்பா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வினோத்குமாா் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...