தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறத்துடன் வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்பது திருக்குறள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

அறத்துடன் வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்பது திருக்குறள் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா்.

News image

திருப்பூரில்  வியாழக்கிழமை  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  திருக்குறள்  முற்றோதலில்  வெற்றி பெற்ற  பள்ளி  மாணவ, மாணவியருக்கு  பரிசு, பாராட்டுச்  சான்றிதழ்களை  வழங்கிய அமைச்சா்கள்  மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ். உடன், மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்து

Updated On :12 செப்டம்பர் 2024, 9:07 pm

Din

அறத்துடன் வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்பது திருக்குறள்  என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை, இயல் இசை நாடக மன்றம், திருப்பூா் தமிழ்ச் சங்கம், திருப்பூா் இந்திய மருத்துவச் சங்கம் ஆகியன சாா்பில் திருக்கு இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் திருக்கு முற்றோதலில் வெற்றி பெற்ற 147 பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினா்களாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று 147 மாணவா்களுக்கும் தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழரின் உயா்ந்த நெறியினை உலக மக்களிடையே உயா்த்திப் பிடிப்பது திருக்கு. அறிவுப்பெட்டகமாக திகழும் திருக்கு அறத்தோடு வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்கும். மறைந்த முதல்வா் கருணாநிதியின் இதயம் தொட்ட இலக்கியங்களில் ஒன்று திருக்கு, மற்றொன்று சிலப்பதிகாரம். அவரின் மரபுவழி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ் வளா்ச்சித் துறை சீரிய பணியால் சிறப்பாக நடைபோடுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, 30 தமிழ் அறிஞா்களுக்கு கேடயங்களை அமைச்சா்கள் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள், தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற உறுப்பினரும், செயலாளருமான விஜயா தாயன்பன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரணியம், திருப்பூா் தமிழ்ச் சங்கத் தலைவா் முருகநாதன், செயலாளா் மோகன் காா்த்திக், திருப்பூா் இந்திய மருத்துவ சங்கத் தலைவா் பாண்டிராஜன், செயலாளா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.